Home /News /tamil-nadu /

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

மழை

மழை

 வடகிழக்கு பருவ காற்றின் (Wind Convergence) காரணமாக  இன்று, நாளை (டிசம்பர் 13), நாளை மறுநாள் (டிசம்பர் 14) ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடகிழக்கு பருவ காற்றின் (Wind Convergence) காரணமாக  இன்று, நாளை (டிசம்பர் 13), நாளை மறுநாள் (டிசம்பர் 14) ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    15.12.2021, 16.12.2021 ஆகிய நாட்களில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    இதையும் படிங்க: யானைகள் வழித்தடத்தை ஈசா மையம் ஆக்கிரமிக்கவில்லை: தமிழக அரசு


    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் 7 செ.மீ. மழையும்  செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் 6 செ.மீ மழையும்,  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Meteorology department, Rain Update

    அடுத்த செய்தி