ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை: வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை  உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த ஒன்று முதல் 3 மணி நேரம் வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்  கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை காண முடிந்தது.  மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று அணையின் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. கோடைக்காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

  ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்திற்கு இயல்பாக 56 மி.மீ. மழை கிடைக்கப் பெறும் என்ற நிலையில், கடந்த 19.6.2022 அன்று ஒரே நாளில் சென்னை மாவட்டத்தில் 82.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவும் சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. காற்றுடன் கூடிய  கனமழை காரணமாக ஒருசில பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

  மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்: துரைமுருகன் தலைமையிலான தமிழக குழு மத்திய அமைச்சருடன் இன்று சந்திப்பு

  இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்  அடுத்த ஒன்று முதல் 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Chennai Rain, Rain, Regional Meteorological Centre, Weather News in Tamil