ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்தியரேகை பகுதிகளில் இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இலேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்றும் நாளையும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில்  தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

13.01.2022: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இதையும் படிங்க: ஊரடங்கு.. மொய் விருந்து நடத்த தடை: புதுக்கோட்டை எஸ்பி எச்சரிக்கை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

09.01.2022 முதல் 11.01.2022: தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்தியரேகை பகுதிகளில் ( 1.5 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் மது விற்பனை ஜோர்... புத்தாண்டு விற்பனையை தாண்டியது

First published:

Tags: Meteorology department, Rain, Regional Meteorological Centre