Home /News /tamil-nadu /

தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் - வானிலை மையம்

தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் - வானிலை மையம்

மாதிரி படம்

மாதிரி படம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நேற்று காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழகத்தில் இந்த ஆண்டில் வடகிழக்குப் பருவமழை, 10 நாட்கள் தாமதமாக கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நேற்று காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக, தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மூன்று தினங்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களை வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: North East Monsoon, Rain

    அடுத்த செய்தி