ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Weather update | தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ALSO READ | சென்னையில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்துவிடலாம்: மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

    மேலும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: MET, MET warning, Meteorological Center, Weather News in Tamil