ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த சில மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த சில மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

Weather update | தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் ஒரு சில இடங்களிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ALSO READ | மேடையில் அமர்ந்திருந்த டி.ஆர்.பாலுவுக்கு காலணி எடுத்து தந்த நபர் - வைரலாகும் வீடியோ

    மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Heavy rain, MET, MET warning, Meteorological dept