ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தின் 23 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று

    கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் குறிப்பாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, ராணிப்பேட்டை,  வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,  மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, சிவகங்கை, பெரம்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ட வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, சென்னையில் நேற்று இரவு முதல் பனியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இன்று அதிகாலையிலும் பனி மூட்டமாக கணப்பட்டது.

    தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Heavy rain, Weather News in Tamil