Home /News /tamil-nadu /

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

அடுத்த 4 நாட்களுக்கு மழை

அடுத்த 4 நாட்களுக்கு மழை

Weather update: தமிழகத்தில் சில பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, நாமக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    இன்று (26.04.2022) கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, நாமக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை (27.04.2022) கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    28, 29, 30ஆகிய தேதிகளிலும் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

    Read More : சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் ஒளிவட்டம்.. ஒன்றரை மணி நேரம் நீடித்த அதிசயத்தை கண்டு பொதுமக்கள் ஆச்சரியம்..

    சென்னையை பொறுத்தவரை:

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு :பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 2 சென்டிமீட்டரிலும் , சிற்றாறு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 1 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்தது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
    Published by:Elakiya J
    First published:

    Tags: Chennai, Heavy Rainfall, Tamil News, Weather News in Tamil

    அடுத்த செய்தி