ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், `பொங்கல் தினமான இன்றும் (14ம் தேதி), நாளையும்(15ம் தேதி) கடலோர மாவட்டங்கள், மற்றும் அதைச் சுற்றியுள்ள உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also read:   அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: கார், பைக் பரிசு வழங்கும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும்' என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், `15 மற்றும் 16-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, 17 மற்றும் 18ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read: ரவுடி படப்பை குணாவுக்கு உதவியதாக 40 காவலர்கள் பணியிட மாற்றம் - டி.ஜி.பி அதிரடி உத்தரவு

First published:

Tags: Rain, Rain Update, Weather News in Tamil