உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக
கன்னியாகுமரி,
திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான
மழை பெய்யக்கூடும் என்று
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் (30.03.2022, 31.03.2022) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கோவை பேரூராட்சி தலைவர் தேர்தலில் மோதல்.. திமுகவினரை தாக்கியதாக அதிமுகவினர் 9 கைது!
கடந்த 24 மணி நேரத்தில் கீழ்கண்ட இடங்களில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தேக்கடி (தேனி), ராசிபுரம் (நாமக்கல்) தலா 3, சோலையார் (கோயம்புத்தூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), சந்தியூர் கேவிகே (சேலம்) தலா 2, கொடவாசல் (திருவாரூர்), உத்தமபாளையம் (தேனி), பூதலூர் (தஞ்சாவூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), சின்கோனா (நீலகிரி), வால்பாறை பிஏபி (கோவை), கெத்தை (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 1.
மேலும் மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதர விபரங்களுக்கு
imdchennai.gov.in இணையதளத்தை காணவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.