• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கோப்பு படம்

கோப்பு படம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வரும் இரண்டாம் தேதி முதல் 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளளது.

    மேலும் அரபிக்கடலில் நாளை புயல் உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சௌராஷ்டிரா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

    இது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகும். அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறும்.

    அதனைத் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இந்திய கடற்பகுதிகளை விட்டு பாகிஸ்தான் மக்ரான் கடற்பகுதிகளுக்கு அருகே செல்கிறது.

    குலாப் புயல் காரணமாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று கரையை கடந்து வலுவிழந்த பின் மீண்டும் வலுப்பெற்று அரபிக்கடலில் புயலாகிறது, இதற்கு Shaheen என்ற கத்தார் நாட்டின் பெயர் சூட்டப்பட உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: