ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

மழை

மழை

Weather Update : தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஜூன் 09 2022 முதல் 11ஆம் தேதிவரையில் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

  மேலும், 12.06.2022, 13.06.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

  கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

  திருப்பத்தூர் (சிவகங்கை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 4, பொன்னமராவதி (புதுக்கோட்டை) 3, தேவாலா (நீலகிரி), எமராலட் (நீலகிரி), செறுமுள்ளி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), காரியாபட்டி (விருதுநகர்) தலா 2, கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்), கேத்தாண்டபட்டி (திருப்பத்தூர்) தலா 1.

  மீனவர்களுக்கான எச்சரிக்கை :

  இன்று (09.06.2022) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  நாளை (10.06.2022) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், கர்நாடக கடலோரப்பகுதி பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  11, 12, மற்றும் 13 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், வட கேரளா - கர்நாடக கடலோரப்பகுதி மற்றும் இலட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  Must Read : அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடரும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

  எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Meteorological Center, Rain Forecast, Weather News in Tamil