தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

கோப்பு படம்

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

  • Share this:
    தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    14 ஆம் தேதியான இன்று தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களான புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

    15, 16ஆம் தேதிகளில் தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    17, 18 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை, பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு

    கோத்தகிரி  11 செ.மீ, எடப்பாடி 8 செ.மீ, ஆரணி, சோலையார் தலா 5 செ.மீ, வாலிநோக்கம், கொடநாடு தலா 4 செ.மீ, கயத்தாறு, மேட்டூர் பெருஞ்சாணி அணை, தாத்தையங்கார்பேட்டை, சின்னக்கல்லார்,  தொண்டி, குழித்துறை தலா 3  செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.  .
    மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை  எதுவுமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... வேறொரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்ட தாயை ஓடஓட விரட்டி கொன்ற சிறுவன்...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: