தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  • Share this:
    வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திர காலம் நடைபெற்று வருகிறது, வட மாவட்டங்களில்  வெயில் அதிகமாக காணப்படுகிறது. அதே நேரம், தென்காசி, திருநெல்வேலி  உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கொடை மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை வானிலைஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில்,  தென் தமிழகம்  மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, தருமபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் இன்று   பெய்யக்கூடும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  மே 11ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும்,. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    இதேபோல், கடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  நாளை மறுநாள் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என  வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     

    மே 11 முதல் 13ம் தேதிவரை கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல்3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் மே 10ம் தேதிமுதல் 14ம் தேதிவரையும் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மே 14ம் தேதியும் மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: