ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Headlines Today : தமிழகத்தில் 27ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 24, 2022)

Headlines Today : தமிழகத்தில் 27ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 24, 2022)

மழை

மழை

Headlines Today : தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்துவரும் நிலையில், வரும் 27ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகம், புதுச்சேரியில் வரும் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் 124 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு (1063 பேருக்கு) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக நியமனம் மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடும் சர்ச்சைகளுக்கு இடையே நிறைவடைந்த நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றுள்ளார்.

தேனியில் உத்தமப்பாளையம், கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் 500 மின்சார பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட கடைசி மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஆம்னி பேருந்தை அபகரித்த வழக்கில் பாஜக நிர்வாகியும், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் வாகன சோதனையின்போது கட்டு கட்டாக 2 கோடி ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது.

குத்தாலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலத்தில் முறைகேடு என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் நடைபெறும் 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் 50 ரகங்களில் மாங்கனிகள் இடம்பெற்றுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள திரவுபதி முர்மு, இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம், ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கொரோனா உருமாறுவதைக் கண்டறிய மரபணு வரிசைமுறை சோதனையை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஹிமந்த சர்மா பிஷ்வா, ஹெலிகாப்டரில் பயணம் செய்தவாறு வான் வழியாக ஆய்வு செய்தார்.

ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த பொறியாளரும், பேராசிரியருமான பிலால் அஹமது, சூரிய ஆற்றலால் இயங்கக் கூடிய காரை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

அக்னிபத் திட்டத்தின்படி இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளை செய்ய தொழிற்நுட்பக்குழுவை இந்தியா அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : 12-எம்.எல்.ஏக்களை பதவிநீக்கம் செய்யுங்கள்.. சிவசேனா கோரிக்கை - உச்சக்கட்ட பரபரப்பில் மகாராஷ்டிரா அரசியல்

தனியார் அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவில்,உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தேர்வாகியுள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சுழற்பந்து வீச்சாளர்அஸ்வின், இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

துருக்கியில் தொடர்ந்து 3 நாட்களாக எரிந்து வரும் காட்டுத்தீயால் அரிய வகை மரங்கள் சாம்பலாகின.

First published:

Tags: Headlines, Rain, Tamil News, Today news, Top News