Home /News /tamil-nadu /

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வெளுத்து வாங்கப்போகுது மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வெளுத்து வாங்கப்போகுது மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை

Rain for Next 5 Days : தமிழ்நாடு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து மழையால்  கோடை வெப்பம்  கொஞ்சம் தணிந்துள்ளது.

     

    இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Read More : Beast Review திரையை தெறிக்க விடும் விஜய்... ரிப்பீட் மோடில் அரபிக் குத்து பாடல்!

    இதேபோல, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Must Read : சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே வெடித்த மோதல்.. ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் அரிவாளுடன் ஏறியும் இளைஞர்கள் அட்டூழியம்

    முன்னதாக தேனி மாவட்டத்தில் போடி, ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் நேற்றிரவு அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தால் தவித்த தேனி மக்கள் கடந்த சில நாட்களாக ஆறுதல் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், பெரியகுளத்தில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் மின்மாற்றியில் தீப்பற்றியது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தால் 14வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து பழுதை நீக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதேபோல, பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும், மரம் விழுந்ததால் மின் விநியோகம் தடைபட்ட நிலையில், ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் மழையால் குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கோடை மழையால் தென் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதேபோல தமிழத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Indian Meteorological Center, Rain, Rain Forecast, Weather News in Tamil

    அடுத்த செய்தி