ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 16, 17, 18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 19 ஆம் தேதி வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 - அரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக பெண்கள் கருத்து

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16 ஆம் தேதி வரையும், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் 19 ஆம் தேதி வரையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், மன்னார் வளைகுடா பகுதிகளில் வரும் 16, 17 ஆம் தேதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

First published:

Tags: Meteorological Center, Rain, Rain Forecast