Home /News /tamil-nadu /

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

மழை

மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது மழை பெய்யக்கூடும்.

    வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில், வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    12.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    13.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    14.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Also Read : சிவகங்கையில் சட்ட கல்லுரி, வேளாண் கல்லூரியை துவக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்!

    15.12.2021: தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Weather News in Tamil

    அடுத்த செய்தி