Home /News /tamil-nadu /

Headlines Today : இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - தலைப்புச் செய்திகள் (மே 16-2022)

Headlines Today : இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - தலைப்புச் செய்திகள் (மே 16-2022)

மழை

மழை

Headlines Today : இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  வெப்பச்சலனத்தால் கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்த நிலையில், இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திருநெல்வேலி அருகே கல்குவாரியில் 300 அடி பள்ளத்தில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 3 பேரை மீட்கும் பணி தொடர்கிறது.

  மத்திய அரசின் புதிய திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 26ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பிரதமர் நரேந்திர மோடி இன்று நேபாளத்துக்கு செல்கிறார், புத்தர் பிறந்த இடத்தில் தரிசனம் செய்கிறார். அவர் முன்னிலையில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

  காங்கிரசில் இனி ஒரு நபருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்கப்படும் என சிந்தனை அமர்வு மாநாட்டில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
  காங்கிரஸூக்கு ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது திமுக.

  இலங்கையில் புதிய அரசுக்கு முன்னாள் அதிபர் சிறிசேன ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நிதிநிலை குறித்து இன்று அறிக்கை வெளியிடுகிறார் பிரதமர் விக்ரமசிங்கே.

  நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ( மே - 16, 17) இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம்.

  ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கொடுத்தால் 50 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் திருச்சியில் வீதி, வீதியாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயம், வாடிகனில் நடந்த விழாவில் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

  நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே கொப்பையூர் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் உயிரிழந்தார்.

  கொரோனா கால ஊரடங்கின்போது, அரசு உத்தரவை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்யுமாறு காவல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் 3ம் நாளையொட்டி, ஹனுமந்த வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.

  தமிழ் மொழிக்கு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதை எதிர்த்து நிற்பது தம் கடமை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  தமிழக மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டால் பிரதமர் அல்ல, ராணுவமே வந்தாலும் தமிழகத்தில் பாதுகாப்பு கிடையாது என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

  சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் சார்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேரணி நடத்தப்படும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் 6 மாநிலங்களில் கோதுமை கொள்முதலுக்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மே 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த இடதுசாரிகள் அழைப்பு விடுத்து உள்ளன.

  இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சிறிசேன அறிவித்துள்ளார்.

  இத்தாலியில் நடந்த இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் உக்ரைனைச் சேர்ந்த இசைக்குழு வெற்றி பெற்றது.

  Must Read : திருவண்ணாமலையில் திடீரென பெய்த மழை.. குடை பிடித்து கிரிவலம் சென்ற பக்தர்கள்

  விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல, பத்தல பாடலில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கக் கோரி நடிகர் கமல்ஹாசனுக்கு வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

  ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

  தாமஸ் கோப்பை பேட்மின்டன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி