Home /News /tamil-nadu /

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

மழை

மழை

TN Rain Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நாளை வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மாவட்டம் மற்றும் தேதி வாரியாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

    13.07.2022 அன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    14.07.2022மற்றும் 15.07.2022 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    16.07.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    சென்னையை பொறுத்தவரை:

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

    தேவாலா (நீலகிரி) 12, மேல் பவானி (நீலகிரி) 10, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 9, சின்கோனா (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி) 8, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்) தலா 7, நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்), அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்), மேல் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) தலா 6, பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 5, பெரியார் (தேனி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) தலா 4

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    12.07.2022: கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    13.07.2022 முதல் 16.07.2022 வரை: கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    12.07.2022, 13.07.2022: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    14.07.2022: ஆந்திர கடலோரப்பகுதிகள் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    15.07.2022, 16.07.2022: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Heavy Rainfall, Tamilnadu

    அடுத்த செய்தி