Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

மழை

மழை

சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 16-ம் தேதி முதல் மிதமான மழை பெய்யும் என்றும், ஏனைய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யகூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், 17-ம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யும், சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், 4 நாட்களுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மிதமாக மழை பெய்தது. ஆனால், லேசான மழைக்கே தாம்பரம் பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த இடமே சேறும் சகதியுமாக இருப்பதால் சிரமத்திற்கு ஆளாவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    அத்துடன், பேருந்து நிலையத்தில் நிற்க முடியாததால் ஜி.எஸ்.டி சாலையில் பாதுகாப்பற்ற முறையில் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால், மழைநீரை அகற்றி பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் தருமபுரி நகரில் பேருந்து நிலையம், நெசவாளர் காலனி, இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    Must Read : அச்சுறுத்தும் ஒமைக்ரான்... தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்

    மேலும், ஒரு வாரத்திற்குப் பின் பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பலத்த மழை பெய்தது. தற்போது, விவசாய நிலங்களில் பருவத்திலுள்ள நிலக்கடலை, பூ பூக்கும் தருவாயில், தேவையான அளவு மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Rain, Rain Update, Weather News in Tamil

    அடுத்த செய்தி