தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அங்கு அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 31ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றுவீசும் என்பதால், மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.