தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கன
மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 14ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த 24 மணி நேரத்தில், மதுரை மாவட்டம், கள்ளந்திரியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இன்று தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், தெற்கு மகாராஷ்டிரா மற்றும் கோவா கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தபட்டு உள்ளனர்.
நாளையும், நாளை மறுநாளும் தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், தெற்கு மகாராஷ்டிரா, கோவா , கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் இலட்சத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமெனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
11.06.2022, 12.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.06.2022, 14.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
11.06.2022, 12.06.2022: தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு மகாராஷ்டிரா, கோவா , கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
13.06.2022: தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
14.06.2022: தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.