ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு

மழை

மழை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழைவெள்ளம் காரணமாக ஆறுகளில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நாளை தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வங்கக்கடலில் உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் விடிய விடிய மிதமான மழை பதிவானது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் மற்றும் சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில், விட்டு விட்டு பெய்த மழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரின் அளவு அதிகரித்துள்ளது. புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், காலை வரை லேசான மழை கொட்டியது.சென்னையில் கடந்த 200 ஆண்டுகளில் நான்காவது முறையாக சென்னையில் ஒரே மாதத்தில், 100 சென்டி மீட்டர் அளவிற்கு கனமழை பதிவாகியுள்ளது.

First published:

Tags: Chennai Rain, Heavy Rainfall