டிசம்பர் 1, 2, 3-ம் தேதிகளில் தென்தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 1, 2, 3-ம் தேதிகளில் தென்தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

மாதிரிப் படம்

தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று காலை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதுமேலும் வலுப்பெற்று அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழக கடற்கரையை நெருங்கும். எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழக பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  இதன்காரணமாக டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் தென்தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தென்தமிழகத்தை நெருங்கிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்

  வங்ககடல், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் விநாடிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரித்துள்ளது. அதிகபட்சம் 75 கிமீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: