ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

TN Rain Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு காரைக்கால் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நீலகிரி,  கோவை மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கு இந்த இரு மாவட்டங்களிலும்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

09.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

10.07.2022 மற்றும் 11.07.2022 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12.07.2022 மற்றும் 13.07.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

அவலாஞ்சி (நீலகிரி) 8, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), மேல் பவானி (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி) தலா 7, சின்கோனா (கோயம்புத்தூர்) 6, வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 5, க்ளென்மோர்கண் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 4, தேவாலா (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 3.

First published:

Tags: Heavy rain, Rain Update, Tamil Nadu