• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை

கனமழை

கனமழை

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் இயல்பைவிட 113 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் மாநிலத்தின்  நான்கு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அது மேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு அரபிக்கடல் நோக்கி செல்லும் என்று கூறியுள்ளார்.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 4 இடங்களில் மிக கனமழையும், 10 இடங்களில் கனமழையும் பெய்து இருக்கிறது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 20 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

    அதன் தொடர்ச்சியாக இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், பிற பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் மாதத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 29 சதவீதம் அதிகம். கடந்த 20 ஆண்டுகளை பொறுத்தவரையில், 6ஆவது முறையாக அக்டோபர் மாதத்தில் அதிக மழை பெய்திருக்கிறது. அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட சற்று அதிகமாகவும், 7 மாவட்டங்களில் மிக அதிக மழையும் பெய்துள்ளது.

    Must Read : தமிழ்ப் புத்தாண்டு எப்போது? தமிழக அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன?

    தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் இயல்பைவிட 113 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. தீபாவளி தினத்தன்று தமிழகம், புதுச்சேரியில் ஓரளவுக்கு மழை இருக்கும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: