தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜூன் 17) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான
மழை பெய்யக்கூடும் என்றும்,
கன்னியாகுமரி,
நீலகிரி,
கோயம்புத்தூர்,
திருப்பூர்,
தேனி,
திண்டுக்கல்,
தென்காசி,
ஈரோடு,
கிருஷ்ணகிரி, தருமபுரி,
திருப்பத்தூர்,
வேலூர்,
ராணிப்பேட்டை,
சேலம்,
நாமக்கல்,
கரூர்,
நாகப்பட்டினம்,
மயிலாடுதுறை,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
கடலூர்,
பெரம்பலூர்,
அரியலூர்,
திருச்சி,
புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நானை (18ஆம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞாயிற்று கிழமை (19.06.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், 20, 21ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) 12, திருப்புவனம் (சிவகங்கை) 10, நத்தம் (திண்டுக்கல்) 9, சூளகிரி (கிருஷ்ணகிரி), பாலக்கோடு (தருமபுரி), மாரண்டஹள்ளி (தருமபுரி), திருப்பூர் பொதுப்பணித்துறை (திருப்பூர்), நாகுடி (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (திருப்பத்தூர்) தலா 8, அறந்தாங்கி (புதுக்கோட்டை), சின்கோனா (கோயம்புத்தூர்), சிவகங்கை (சிவகங்கை), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), குடுமியான்மலை (புதுக்கோட்டை), அரிமளம் (புதுக்கோட்டை), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) தலா 7,
டேனிஷ்பேட்டை (சேலம்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), அரியலூர் (அரியலூர்), தளி (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), ஊத்துக்குளி (திருப்பூர்) தலா 6, ஒகேனக்கல் (தருமபுரி), சின்னக்களார் (கோயம்புத்தூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), ஈரோடு (ஈரோடு), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) தலா 5, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பேரையூர் (மதுரை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), விரகனூர் அணை (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை) தலா 4,
ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), ஓசூர் (கிருஷ்ணகிரி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), செங்கம் (திருவண்ணாமலை), திண்டுக்கல் (திண்டுக்கல்), ஆண்டிபட்டி (தேனி), வத்தலை அணைக்கட்டு (திருச்சி), கோத்தகிரி (நீலகிரி), (புதுக்கோட்டை), ஏற்காடு (சேலம்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), முசிறி (திருச்சி), திருப்பூர் (திருப்பூர்), கயத்தாறு (தூத்துக்குடி), பென்னாகரம் (தருமபுரி), பாலவிதிதி (கரூர்), மதுரை விமான நிலையம் (மதுரை), ஆத்தூர் (சேலம்) தலா 3.
கடவூர் (கரூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), கயத்தாறு ARG (தூத்துக்குடி), வேடசந்தூர் (திண்டுக்கல்), பெரம்பலூர் (பெரம்பலூர்), போடிநாயக்கனூர் (தேனி), அவிநாசி (திருப்பூர்), எருமப்பட்டி (நாமக்கல்), ஓமலூர் (சேலம்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), மதுரை தெற்கு (மதுரை), சிவகாசி (விருதுநகர்), பையூர் AWS (கிருஷ்ணகிரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), மாயனூர் (கரூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), வாணியம்பாடி (திருப்பத்தூர்) தலா 2,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மோகனூர் (நாமக்கல்), அரவக்குறிச்சி (கரூர்), சோலையார் (கோயம்புத்தூர்), தல்லாகுளம் (மதுரை), பவானிசாகர் (ஈரோடு), பேராவூரணி (தஞ்சாவூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), வீரபாண்டி (தேனி), வந்தவாசி (திருவண்ணாமலை), நிலக்கோட்டை (திண்டுக்கல்), சிவகிரி (தென்காசி), கூடலூர் பஜார் (நீலகிரி), கறம்பக்குடி (புதுக்கோட்டை), கல்லிக்குடி (மதுரை), அன்னூர் (கோயம்புத்தூர்), கரூர் (கரூர்), மணப்பாறை (திருச்சி), புள்ளம்பாடி (திருச்சி), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), பெருந்துறை (ஈரோடு), திருத்தணி PTO (திருவள்ளூர்), காங்கேயம் (திருப்பூர்), சீர்காழி (மயிலாடுதுறை), கூடலூர் (தேனி), பாரூர் (கிருஷ்ணகிரி), லால்குடி (திருச்சி), நடுவட்டம் (நீலகிரி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பரமத்திவேலூர் (நாமக்கல்), குளித்தலை (கரூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), பெரியகுளம் (தேனி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
இன்று (17.06.2022) தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, இலட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை (18ஆம் தேதி) தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, இலட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Must Read : அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள்.. ஓபிஎஸ், இபிஎஸ் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி
19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதி, கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள், இலட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.