தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (மே-30, 2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (மே-30) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 1, 2, மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 - 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பெருங்கல்லூர் (புதுக்கோட்டை) 6, திருச்சி (திருச்சி), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), குழித்துறை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி) தலா 5, நத்தம் (திண்டுக்கல்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), திருச்சி நகரம் (திருச்சி) தலா 4, தக்கலை (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), கோத்தகிரி (நீலகிரி), காரியாப்பட்டி (விருதுநகர்), உதகமண்டலம் (நீலகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பழனி (திண்டுக்கல்), சிற்றாறு (கன்னியாகுமரி), சிவலோகம் கன்னியாகுமரி) தலா 3,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குளச்சல் (கன்னியாகுமரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), துவாக்குடி (திருச்சி), பெரியகுளம் (தேனி), காட்டுமயிலூர் (கடலூர்) தலா 2, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கொடைக்கானல் (திண்டுக்கல்), எமரலாடு (நீலகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), பொன்மலை (திருச்சி), குந்தா பாலம் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), திருமங்கலம் (மதுரை), நாகர்கோவில் (கன்னியாகுமரி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), புத்தன் அணை (கன்னியாகுமரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
இன்றும் நாளையும் (மே-30,31) தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
Must Read : ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்.. அமைச்சர் சக்கரபாணி கூறிய முக்கியத் தகவல்
இந்நிலையில், கேரளாவில் தென் மேற்கு பருவமழை மூன்று நாட்கள் முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை (நேற்று) தொடங்கிவிட்டதாகவும், இதன்மூலம் தமிழகத்திற்கு இயல்பான மழை கிடைக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.