Home /News /tamil-nadu /

Headlines Today : 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 6, 2022)

Headlines Today : 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 6, 2022)

மழை

மழை

Headlines Today : தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

  வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  உத்தராகண்டில் ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

  முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, பாஜக செய்தி தொடர்பாளர்கள் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர், அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

  திராவிட மாடல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மேடையிலேயே பாடம் எடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  தாய் - சேய் ஊட்டச்சத்து பெட்டக திட்டம் குறித்த அண்ணாமலையில் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

  சென்னையில் நடைபெற்ற மலர்க்கண்காட்சி நிறைவடைந்தது. இதில் 3 நாட்களில் 35 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.

  சென்னையில் தொலைபேசி நெட்வொர்க்கை ஹேக் செய்து டெலிபோன் எக்சேன்ஞ் நடத்தி வந்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடையவுள்ள நிலையில் உதகை, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

  கடலூரில் கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள், 3 பெண்கள் என 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை சட்டவிரோதமாக எடுத்து விற்றது தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மருத்துவத் துறையை சேர்ந்த அதிகாரிகள் குழு விசாரணை நடத்தினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கோவையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற உணவு திருவிழா பொதுமக்களின் ஆதரவுடன் கோலாகலமாக நடந்து முடிந்தது.

  உலக சுற்றுச்சூழல் நாளை ஒட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

  44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  கத்தாருடன் இந்தியா வலுவான பொருளாதார கூட்டுறவைப் பகிர்ந்து கொள்வதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  Must Read : கொடைக்கானலில் மிதமான மழை.. குடைப்பிடித்து இயற்கை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்

  ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான புதிய அமைச்சரவையில், 21 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

  வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்பத்தியுள்ளது.

  வங்கதேச நாட்டின் சிட்டகாங் நகரில் உள்ள தனியார் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட, பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர்.

  நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Rain, Today news, Top News

  அடுத்த செய்தி