ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Headlines Today : 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 15, 2022)

Headlines Today : 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 15, 2022)

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

Headlines Today : வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

போடி அருகே ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுற்றுலாப்பயணிகள் மூன்று பேரை தீயணைப்புப்படையினர் பத்திரமாக மீட்டனர். ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

முகமது நபி குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபரை கோவையில் போலீஸார் கைதுசெய்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு இன்று தொடங்குகிறது. ஜூலை 18ல் தேர்தல்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 18-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிந்த நிலையில், மீனவர்கள் மீன் பிடிக்க உற்சாகமாக கடலுக்கு சென்றனர்.

தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கையில், 69 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே பின்பற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநில அரசைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் தமுமுகவினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மகா பிரத்தியங்கரா தேவி கோயிலில் உலக நன்மைக்காக பவுர்ணமி சிறப்பு மிளகாய் வத்தல் யாக பூஜை நடைபெற்றது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயமானது குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு, 29 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் தனியார் ரயில் வடகோவை ரயில் நிலையத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடிக்கு நேற்று மாலை 6 மணிக்கு புறப்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்ட 11 வயது சிறுவனை 104 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு, மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

உத்தர பிரதேச அரசின் நடவடிக்கைக்கு எதிராக தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட 12 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பாதுகாப்புப் படைகளில் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியாற்றும் வகையில், இளைஞர்களை தேர்வுசெய்வதற்கான அக்னிபாத் என்ற திட்டத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த முன்னாள் பாஜக நிர்வாகி நுபுர் சர்மா-வுக்கு ஆதரவாக ஹைதராபாத்தில் பேரணி நடத்தியவர்களுடன் மற்றொரு குழுவினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே 6 மணி நேரத்துக்குள் 24 முட்டைகளையிட்ட கோழியை கிராம மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான வாக்குமூலத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்காவிற்கு உயர் சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு, விதியை மீறி எதுவும் நடக்காது என்று டி.ராஜேந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.

திரைப்படங்களுக்கான டிக்கெட் விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இலங்கையில் உணவுப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Must Read : ஆடு திருடிய நபரை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர்.. வீடியோ வெளியான நிலையில் பணியிடை நீக்கம்

உலக அளவில் இரண்டாவது மதிப்புமிகுந்த விளையாட்டுத் தொடராக ஐபிஎல் மாறியுள்ளதாக அதன் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக AFC ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற 61-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

First published:

Tags: Headlines, Today news, Top News