• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

மழை

மழை

தொடர் மழை மற்றும் ஆந்திராவில் இருந்து நீர் வரத்து அதிகரித்திருப்பதால், பருவமழைக்கு முன்பே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில், குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், சிவதாபுரம் பகுதியில் எம்.ஜி.ஆர். நகர், இந்திரா நகர், பனங்காடு உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளிலும் நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனிடையே, ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால், வசிஷ்ட நதி அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து, நிரம்பி வழியும் நீரில் குளித்தும், செல்பி எடுத்தும் பொதுமக்கள் மகிழ்கின்றனர்.

    தருமபுரியில் பாப்பிரெட்டிப்படடி, பொம்மிடி, பூதநத்தம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும், பல இடங்களில் மழை நீருடன், சாக்கடையும் கலந்து சாலைகளில் தேங்கி நின்றதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர்.

    தொடர் மழை மற்றும் ஆந்திராவில் இருந்து நீர் வரத்தால் பருவமழைக்கு முன்பே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகளும் நிரம்பி வருகின்றன. அதில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இந்நிலையில், ஏரியை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் பார்வையிட்டார்.

    இந்நிலையில், குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

    Must Read : விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை

    இதனால், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரளா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: