மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. தற்போது வளிமண்டல சுழற்சியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. பிற மாவட்டங்களின் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் 16 சென்டி மீட்டர் மழையும், வைப்பாரில் 12 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.