தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனிடையே மயிலாடுதுறையில் பெய்த கனமழையால், 100 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

 • Share this:
  அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாகவும் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில், மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான் கடற்பகுதியில், புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வருகிற 14ம் தேதி உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னை மற்றும் புறநகர்

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

  மேலும் படிக்க...எதிரணிக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டால்...’ தனிச்சின்னம் விவகாரம் தொடர்பாக தொல்.திருமாவளவன் விளக்கம்

  இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், தருமபுரி ஒகேனக்கல் ஆற்றின் நீர்வரத்து, விநாடிக்கு 22,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சீனி அருவி உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

  போட்டி அட்டவணை

  கிருஷ்ணகிரி

  கனமழை காரணமாக கிருஷ்ணகிரியின் தேவசமுத்திரம் ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் அக்ரஹாரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது.

  கோவை

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது.

  மயிலாடுதுறை

  மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் கிராமத்தில் நாற்றங்கால்களை மழைநீர் மூழ்கடித்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு வாரமாக பெய்த மழையால்,100 ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இப்பகுதியின் வடிகால் வாய்க்காலாக விளங்கும் வெள்ள வாய்க்காலை கடந்த 8 ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர் தூர்வாரவில்லை என குற்றஞ்சாட்டும் விவசாயிகள், அழுகிய நாற்றுகளுடன் வயலில் இறங்கி கண்டன முழக்கமிட்டனர்.

  மதுரை

  இதனிடையே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியதால், அதில் பெண்மணி ஒருவர் விழுந்து காயமுற்றார். உடனடியாக அங்கிருந்தவர்கள் பெண்ணை பள்ளத்தில் இருந்து மீட்டதால் அவர் உயிர்தப்பினார்.

   
  Published by:Vaijayanthi S
  First published: