Home /News /tamil-nadu /

Headlines Today : தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 29, 2022)

Headlines Today : தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 29, 2022)

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

Headlines Today : தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

  திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் இன்று கலந்துகொள்கிறார்.

  நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சு வலி காரணமாக நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

  அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

  ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார்.

  மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

  நரிக்குறவர் இன மக்கள் வழங்கிய மனுவுக்கு சிறப்பு முகாம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

  தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 6வது நாளாக ஆயிரத்தை கடந்து பதிவாகி உள்ளது. 1,461 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  ராஜஸ்தானில் நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டதுடன், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

  கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் 14 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார்.

  மும்பை அருகே கடலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

  தெலங்கானா மாநிலத்தில் தலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் பள்ளி மேல்நிலைத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

  சிக்கிமில் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 22 பேர் காயமடைந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வரி செலுத்துவோர் ரீஃபண்ட் பெறுவதற்கான விதிகளை தளர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது.

  ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபருடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

  Must Read : நடிகை மீனாவின் கணவர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது - சரத்குமார்

  விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

  மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் போலந்து இளம் வீராங்கனை ஸ்வியாடெக், குரோஷிய வீராங்கனை ஜனா பெட்டை வென்றார்.

  அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றிபெற்று, தொடரைக் கைப்பற்றியது.

  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மழையால் தவறவிட்ட தங்கப்பதக்கத்தை அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கைப்பற்றுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் மாரியப்பன்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Rain, Today news, Top News

  அடுத்த செய்தி