முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Weather Report | தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..

Weather Report | தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..

மழை

மழை

வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 21ம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று, இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க... Southwest Monsoon : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறதா? : வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. வடதமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உயரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு வரை தென் தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

top videos
    First published:

    Tags: Heavy rain, Meteorological dept, Rain Forecast