Home /News /tamil-nadu /

வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

Weather Update | மத்திய கிழக்கு வங்கக்கடலில் வரும் 10-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 10 ஆம் தேதி  ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

    வேலூர், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

    மத்திய கிழக்கு வங்கக்கடலில் வரும் 10-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Published by:Vijay R
    First published:

    Tags: Weather, Weather Update

    அடுத்த செய்தி