Weather Report | தமிழகத்தில் இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

மழை

வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • Share this:
    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்
    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு
    YMCA நந்தனம் (சென்னை) 7 செ.மீ, அண்ணா பல்கலை (சென்னை), பூந்தமல்லீ (திருவள்ளூர்), சென்னை விமான நிலையம், கலவை (ராணிப்பேட்டை), சாய் ராம் கல்லூரி மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 5 செ.மீ, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அம்முந்தி (வேலூர்) தலா 4 செ.மீ, திருவாலங்காடு (திருவள்ளூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), வேலூர் தலா 3 செ.மீ, கோத்தகிரி (நீலகிரி), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 2 செ.மீ, சென்னை நுங்கம்பாக்கம், விருதுநகர், சதியார் (மதுரை) தலா 1 செ.மீ.

    மேலும் படிக்க... Fake Facebook | திருப்பூர் கலெக்டர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பண மோசடி

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    08.06.2021 மற்றும் 09.06.2021 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும் 08.06.2021 முதல் 12.06.2021 ஆம் தேதிவரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Vaijayanthi S
    First published: