Weather Report | தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு...

மழை

வெப்பசலனத்தின் காரணமாக இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சென்னை, புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share this:
    தமிழகத்தில் 21.06.2021 முதல் 23.06.2021 வரை உள்ள தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு:

    பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகம் (நீலகிரி), ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 3 செ.மீ, சின்கோனா (கோவை), அவலாஞ்சி (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை), சோலையார் (கோவை), தேவலா (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) தலா 1செ.மீ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... Petrol Diesel Prices | உச்சத்தில் பெட்ரோல்,டீசல் விலை... இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    19.06.2021,20.06.2021 ஆகிய தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் அதனை தொடர்ந்து 23.06.2021 ஆம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: