Weather Report | தென் தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் ...

Weather Report | தென் தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் ...

மாதிரிப் படம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூடத்துடன் காணப்படும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

  • Share this:
    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட ஒன்று முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூடத்துடன் காணப்படும் என குறிப்பிட்டுள்ள வானிலை மையம், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க... Tamil Nadu Assembly Election Results 2021: கரூரில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு...

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: