ரஜினிகாந்த் என்றுமே மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார்தான், அரசியல் தலைவர் இல்லை: விக்கிரமராஜா

ரஜினிகாந்த் என்றுமே மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார்தான், அரசியல் தலைவர் இல்லை: விக்கிரமராஜா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

ரஜினி அரசியல் பிரவேசம்  இல்லை என்று  அறிவித்ததை  உள்ளபூர்வமாக வரவேற்கிறேன் என வானகரத்தில் வணிகர் சங்கங்களின்  பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

 • Share this:
  சென்னை அருகே வானகரம் தனியார் மண்டபத்தில்  கன்னியம்மன் நகர் வியபாரிகள் சங்கத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா நடைப்பபெற்றது. இதில் சிறப்பு விருந்தினாராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று தமிழ்நாடு வணிகர் சங்க  பேரமைப்பின் இணைந்த சங்கத்தின் 15 ஆம் ஆண்டு விழாவில் பல்வேறு விதமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31  வரை கொரோனா கட்டுப்பாட்டு அறிவிப்பு வந்துள்ளது. எனவே  வரக்ககூடிய நாட்கள் பண்டிகை காலங்கள் என்பதால்  வியபாரிகளின் கடைகள் அடைக்கப்படும் நேரத்தை தளர்வு செய்யப்பட வேண்டும்.

  கொரானோ  காலங்களில் வியாபாரிகள் தங்களுடைய வாழ்வாதாரம் இழப்பு ஏற்பட்டு கடந்த 10 மாதம் காலமாக  கடுமையான சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளானர்.  தை  பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழியாக உள்ளது.  ஆகவே தை மாதம்  வியாபாரத்திற்கு அரசு எந்த இடையூறும் செய்யாமல் வியபாரிகளை  பாதுகாக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் பேரவை வலியுறுத்துகிறது” என்று கூறினார்.

  மேலும் படிக்க...ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தது முதல் இன்று வரை..

  மேலும், “கொரானோ  தொற்றால் பாதிக்கப்பட்ட மரணமடைந்த வியபாரிகளின்  குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க  வேண்டும்” என்பதை முதல்வருக்கு  கோரிக்கையாக  வலியுறுத்தினார்.

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ரஜினி மக்கள் மத்தியிலே  சூப்பர் ஸ்டாராக வாழ்ந்தவர். அவரை யாரும் அரசியல் தலைவராக  பார்க்கவில்லை. ஆகவே  இந்த வயதிற்குப் பிறகே அவர் உடலைப் பாதுகாப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை  என்பதை அறிவித்திருக்கிறார.  அதனை  தமிழ்நாடு வணிகர்  பேரமைப்பு உள்ளபூர்வமாக வரவேற்கிறது” என்றார்.

  மேலும் மருத்துவர் கூறியது போல் அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டும்  எங்களை போன்ற ரசிகர்களும் சொல்லுகிறோம், அவருக்கு அரசியல் வேண்டாம் என்பதுதான் எங்கள் கோட்பாடு எனவும்  அரசியல் நோக்கம் குறித்து கூறிய விக்கிரமராஜா தமிழகம் முழுதும்  மாவட்டம் தோறும்  சென்று ஆய்வு செய்து வருகிறோம்.

  தங்களுடைய பேரமைப்பின்  வாக்கு வங்கி அதிகமான வாக்காளர்கள் நிறைந்த  அமைப்பு. தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு தேர்தல் அறிவிக்கப்பட்டதும்  எங்கள்  கோரிக்கை பட்டியலைத் தர இருக்கிறோம். அந்த  கோரிக்கைகளை  நிறைவேற்றக் கூடிய கட்சிகள் யார் என்பதை  பார்த்து எங்கள்  ஆட்சிமன்றக் குழு கூடி முடிவு எடுக்கப்பட்டு  நல்ல தீர்வு எடுக்கப்படும்” என்று கூறினார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: