ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை குறித்து விவரமாக அப்டேட் சொன்ன வெதர்மேன்!

உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை குறித்து விவரமாக அப்டேட் சொன்ன வெதர்மேன்!

கனமழை - புயல்

கனமழை - புயல்

வலுப்பெற்றால் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவக்காற்றின் 1வது சூறாவளியாக மாற 90% வாய்ப்பு உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • chennai |

தமிழக கடற்கரைரையை நோக்கி இந்திய சீன பகுதியில் இருந்து வரும் சக்கரம்  நான்கு நாட்கள் கழித்து நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக வெதர்மேன் அப்டேட் போட்டுள்ளார்.

இந்தோ-சீனா பகுதியில் இருந்து உருவாகி வரும் சக்கரம் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது இன்று அது மெதுவாக நகரத் தொடங்கி தாய்லாந்து வளைகுடாவில் இருந்து அந்தமான் கடலுக்குள் நுழையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நகர்ந்து வரும் காற்றழுத்தம் 4 நாட்களில் அதாவது வரும் டிசம்பர் 8 ஆம் தேதி தமிழக கரையோர பகுதிகளில் புயலை உருவாக்கும் என்று கூறியுள்ளார். அப்போது மகாபலிபுரம் முதல் காரைக்கால் வரை புள் காற்றோடு மழை வர வாய்ப்புள்ளது. அதே சமயம் பாண்டிச்சேரி, கடலூர் படுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

மேடன்-ஜூலியன் அலைவு எனப்படும் கிழக்கு நோக்கி நகரும் மேக கூட்டங்கள் பூமத்திய ரேகைக்கு அருகில் வந்து மழைப்பொழிவு ஏற்படுத்தும். நமது கடலில் உள்ள கிங்மேக்கரரான இது தற்போது சக்கரத்தை தீவிரப்படுத்துவதற்கு சூடான கடல் காற்றுகளை அளித்து உதவுகின்றன,

இது வலுப்பெற்றால் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவக்காற்றின் 1வது சூறாவளியாக மாற 90% வாய்ப்பு உள்ளது. ஆனால் வறண்ட காற்றின் தாக்கத்தால் கடற்கரைக்கு அருகில் வந்து இந்த காற்றழுத்தம் வலுவிழக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது வலுப்பெற்றால் வட தமிழகம் அதீத மழையால் பாதிப்புக்கு உள்ளாகும்.

சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. அவை 1994 அக்டோபர் புயல் மற்றும் 2016 வர்தா. உடனே வரவிருக்கும் சக்கரம் 100 கிமீ வேகத்தில் வீறு கொண்டு வருமோ என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். புள்ளிவிவரங்களை மட்டும் போடுகிறேன்.6 ஆம் தேதிக்குள் அனைத்து புள்ளிவிவரங்களுடன் ஒரு சிறப்பு அப்டேட் போடப்படும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Heavy Rainfall, Weather News in Tamil