சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் செயின் பறிப்பு: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

news18
Updated: June 24, 2019, 6:06 PM IST
சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் செயின் பறிப்பு: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!
பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள்
news18
Updated: June 24, 2019, 6:06 PM IST
சென்னையில் நேற்று ஒரே நாளில் 10 இடங்களில் செயின் பறிப்பு சம்வங்கள் நடைபெற்றுள்ளன. செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க, மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10 இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தில் 26 சவரன் நகைகள் கொள்ளை போயின.

இதில் தேனாம்பேட்டை சீதாம்மாள் காலனியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறிக்க முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் செயினை அந்தப் பெண் இறுக்கமாக பிடித்துக்கொண்டு சத்தமிட்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனால் அவரது தங்க செயின் தப்பித்தது. அதேநேரம் அவர் கீழே தடுமாறி விழுந்ததில் காயமடைந்தார்.

Also see...

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...