தொடர்ந்து அரங்கேறிவரும் செயின் பறிப்பு சம்பவங்கள் கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தும் வண்ணமே உள்ளன. அதிலும் துணிச்சலாக பட்டப்பகலில் செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. திருச்சியிலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி சீனிவாசநகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி விஜயலதா (வயது 50). இவர், வீட்டின் அருகிலுள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க தனது தந்தை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், விஜயலதாவின் கழுத்தில் இருந்த, 15 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து விஜயலதா கொடுத்த புகாரின் பேரில், உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த டீக்கடையில் உள்ள சிசிடிவியில், தப்பியோடிய இளைஞர்கள் பதிவாகி உள்ளனர்.அந்த காட்சிகளை கொண்டு இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.