Home /News /tamil-nadu /

மகளிர் நல மேம்பாட்டில் இந்தியாவுக்கு வழிகாட்டிய தமிழகம்!

மகளிர் நல மேம்பாட்டில் இந்தியாவுக்கு வழிகாட்டிய தமிழகம்!

women empowernment

women empowernment

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் 1.12 லட்சம் மகளிருக்கு 736 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை அளித்து வருகிறது.

    மகளிர் நல மேம்பாட்டினை மையமாக வைத்து பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம், மகளிர் நலனில் அக்கறை கொண்டு பல நலத்திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறது.

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ் தமிழக அரசு 25,0000 உதவித் தொகை அளித்து வருகிறது. இது தவிர கைம்பெண்களின் திருமண உதவி, ஏழை கைம்பெண்களின் மகள்கள், ஆதரவற்றோர் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு என 4 பிற சமூக நலத்திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேற்கண்ட இந்த திட்டங்கள் 1967 முதல் 1989 வரையிலான காலகட்டங்களில் செயல்படுத்தப்பட்டவை ஆகும்.

    மகளிர் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2011, மே 17ம் தேதியன்று முதல் பெண்களுக்கான கல்வி உதவித் தொகையை 50,000 ரூபாயாக அப்போதைய அதிமுக அரசு உயர்த்தியது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:  வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அட்டகாசமான புதிய அப்டேட்

    2016ம் ஆண்டு முதல் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கான திருமணத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கம், 8 கிராமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டமானது 2011ல் துவக்கப்பட்டது. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்களின் திருமணத்துக்காக 8 கிராம் தங்கமும், 50,000 ரொக்கமும் திருமண உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. சமீப ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் வரும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    திராவிட கட்சிகள் பெண்களின் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை அமல்படுத்தியிருந்த போதிலும், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் (SDPC) துணைத் தலைவர் டாக்டர் ஜே ஜெயரஞ்சன், உடல்நலம் மற்றும் கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை விவரிக்காமல் பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதில் உள்ள பகுத்தறிவுடைமை குறித்து கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க:  ஆசியாவுடன் கடலுக்கடியிலான ஃபைபர்-ஆப்டிக் கேபிள் சிஸ்டம் - கூகுள், மெட்டாவிற்கு அமெரிக்கா ஆதரவு

    தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் 1.12 லட்சம் மகளிருக்கு 736 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை அளித்து வருகிறது. இந்த திட்டங்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு குறித்த விதிகளின் காரணமாக தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் பெண்களின் திருமண வயது அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Women Empower

    அடுத்த செய்தி