அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா குழு, டிரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்திற்கு தேர்வாகி இருக்கிறது.
வேளாண்மை துறை, தொழில்துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ட்ரோன்களை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில் ட்ரோன்கள் உபயோகத்திற்கான புதிய விதிமுறைகளையும் மத்திய அரசு வகுத்துள்ளது.
அந்த அடிப்படையில் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றின் உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்க முடிவெடுத்து.
நாட்டில் ட்ரோன்கள் தயாரிப்பு மற்றும் வடிமைப்பில் முன்னணியில் உள்ள 5 நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா குழு மத்திய அரசின் ஊக்கத்தொகையை பெறவும், மத்திய விமான போக்குவரத்து துறையுடன் இணைந்து தேவையின் அடிப்படையில் ட்ரோன்கள் தயாரிக்கும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற சென்னையை சேர்ந்த ஜூப்பா ஜியோ நேவிகேஷன் டெக்னாலஜிஸ் என்கிற ட்ரோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகத்தில் உள்ள வானூர்தி துறையின் கீழ் செயல்படும் ட்ரோன்கள் வடிவமைக்கும் தக்ஷா குழு நாட்டில் ட்ரோன்கள் வடிவமைப்பில் முன்னனியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான வடிவமைப்பு பிரிவான தக்ஷா குழு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆலோசனையின் பெயரில் துவங்கப்பட்டதுடன் தக்ஷா என்கிற பெயர் அப்துல்கலாமால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
வரக்கூடிய காலங்களில் பொதுமக்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஆளில்லா விமானங்கள் என சொல்லப்படக்கூடிய ட்ரோன்களின் பயன்பாடு உலகளவில் அதிகரிக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா குழு ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகளவிலான ட்ரோன்கள் போட்டியில் கலந்துகொண்டு சர்வதேச அளவில் 2ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழக அரசு ட்ரோன்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இந்திய அளவில் ட்ரோன்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக ஆளில்லா விமான போக்குவரத்து கழகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Also read... உயிரோடு இருந்திருந்தால் கருணாநிதி பாதத்தை தொட்டு வணங்குவேன் - நடிகர் சிவக்குமார் உருக்கம்
இதன் மூலம் பொதுமக்கள் ட்ரோன்கள் இயக்க உரிமம் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் ட்ரோன்கள் பயன்பாடு என்பது அனைத்து துறைகளிலும் தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கும் என்பதாலும் இதன்மூலம் அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அம்சங்களை அடையக்கூடும் என்பதால் மத்திய அரசு, மாநில அரசுகள் இவற்றுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க தொடங்கியிருக்கின்றன.
ட்ரோன்கள் பயன்பாடு அதிகரிக்கின்றபோது ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்பதும் இத்துறை முக்கியத்துவம் பெறுவதற்கான அம்சமாக கருதப்படுகிறது.
சென்னை எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் ஆளில்லா விமானத்திற்கான பணியில் இணைந்து சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக அஜித்குமார் ஆலோசகராக பணியாற்றினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University