Cyclone Nivar | நிவர் புயல் பாதிப்புகளை கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு.. சேதமடைந்த பகுதிகளில் நாளை முதல் ஆய்வு..
Cyclone Nivar | நிவர் புயல் பாதிப்புகளை கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு.. சேதமடைந்த பகுதிகளில் நாளை முதல் ஆய்வு..
நிவர் புயல் பாதிப்பு
நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளனர்.
நிவர் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த வாரம் நிவர் புயல் வீசியது. இதனால் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. புயல் காரணமாக நால்வர் உயிரிழந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. மேலும் நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்தன. தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாநில அரசு தரப்பில் ஏற்கெனவே நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னி ஹோத்ரி தலைமையில் சாலை போக்குவரத்து, நிதி, மீன்வளம் உள்ளிட்ட ஏழு துறை அதிகாரிகள் இன்று மாலை தமிழகம் வருகின்றனர். தலைமைச் செயலாளருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த குழு நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யவுள்ளது. மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் அடிப்படையில் தமிழகத்துக்கான மத்திய நிதி உதவி அறிவிக்கப்படும்.
சென்னை புறநகரான செம்மஞ்சேரியில் குடியிருப்புகளில் ஐந்து நாட்களாக வெள்ள நீர் தேங்கியிருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருவதை நியூஸ் 18 தொலைக்காட்சி தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் செம்மஞ்சேரியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முற்பகல் 11 மணி அளவில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.