Home /News /tamil-nadu /

சென்னை சென்ட்ரலுக்கு எம்ஜிஆர் பெயர்: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

சென்னை சென்ட்ரலுக்கு எம்ஜிஆர் பெயர்: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் (கோப்புப்படம்)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் (கோப்புப்படம்)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கக்து.

  • News18
  • Last Updated :
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை, எம்ஜிஆர் ரயில் நிலையம் என மாற்றம் செய்து, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்துள்ளது.

    தலைநகரான சென்னை என்றாலே, முதலில் நினைவுக்கு வரும் இடங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை ரயில் நிலையத்தின் பெயரை டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்த தீர்மானம் பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் 12-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய சென்னை எம்.பி. எஸ்.ஆர் விஜயகுமாரும் 377-வது சட்டவிதியின்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில், தமிழகத்துக்கு கடந்த மாதம் 6-ம் தேதி வந்த பிரதமர் நரேந்திர மோடி, வண்டலூர் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

    அப்போது கூட்டத்தில் பேசிய மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கான அறிவிக்கையை அரசிதழில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்டுள்ளார்.

    அதில், பெயர் மாற்றம் செய்வதற்கு தடையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த மாதம் 9-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அறிவிக்கை வெளியான நாளிலிருந்து பெயர் மாற்றம் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also see... திமுக VS அதிமுக... கூட்டணி பலம் யாருக்கு?

    Also read...




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்
    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Lok Sabha Key Constituency, MGR

    அடுத்த செய்தி