Home /News /tamil-nadu /

பிராந்திய மொழிகளிலும் ரயில்வே துறைத் தேர்வுகள் - திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று ஸ்டாலின் பெருமிதம்

பிராந்திய மொழிகளிலும் ரயில்வே துறைத் தேர்வுகள் - திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று ஸ்டாலின் பெருமிதம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ரயில்வே துறையில் போட்டித் தேர்வுகளை பிராந்திய மொழிகளில் நடத்தலாம் என்று அறிவித்திருப்பது திமுக-வின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    ரயில்வே துறையில் போட்டித் தேர்வுகளை பிராந்திய மொழிகளில் நடத்தலாம் என்று மத்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ரயில்வே துறையில் பதவி உயர்வுக்காக நடத்தப்படும் ஜிடிசிஇ தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இடம்பெற வேண்டும் என ரயில்வே தேர்வு வாரியம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    பிராந்திய மொழிகளில் இருக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ரயில்வே வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

    இதற்கிடையே, சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் தலைமையில் சென்னை, சேலம் கோட்டத்திற்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 26 பேர் கலந்து கொண்டு தங்களது தொகுதிக்கப்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டப் பணிகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    அப்போது, ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும், ரயில்வே துறை தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தெரிவித்தார்.

    தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மாநில மொழிகளில் ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத எந்த தடையும் இல்லை என்று ரயில்வே தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.

    இதுகுறித்து ரயில்வே வாரியம் அனைத்து மண்டல ரெயில்வே மேலாளர்களுக்கும் விளக்க கடிதம் அனுப்பியுள்ளது.

    ரயில்வே வாரியத்தின் இந்த அறிவிப்பு திமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.



    தமிழ் மொழிக்காக திமுக தொடர்ந்து உறுதியுடன் போராடும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு மாநில மொழியை புறக்கணித்து விட்டு தபால் துறை தேர்வு நடத்தப்பட்டது.

    அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்ததை அடுத்து தபால் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் மாநில மொழிகளில் தேர்வு நடைபெற்றது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Indian Railways, MK Stalin

    அடுத்த செய்தி