• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜாவை தேசிய பேரிடராக அறிவித்தால்தான் முழு நிதியுதவி கிடைக்கும் - தம்பிதுரை

கஜாவை தேசிய பேரிடராக அறிவித்தால்தான் முழு நிதியுதவி கிடைக்கும் - தம்பிதுரை

தம்பிதுரை (கோப்புப் படம்)

தம்பிதுரை (கோப்புப் படம்)

மத்திய அரசு நிதி உதவி வழங்கும் என நம்புகிறோம். தராவிட்டால் என்ன செய்வோம் என்பதை பின்னர் முடிவு செய்வோம் என்றார் தம்பிதுரை.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ‘கஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்தால்தான் மத்திய அரசிடமிருந்து முழுமையான நிதியுதவி கிடைக்கும்’ என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

    கரூரில், தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசிடம் புயல் நிவாரண நிதி எவ்வளவு கேட்கப்பட்டது என்பது முக்கியமல்ல. பிற மாநிலங்களைவிட தமிழகத்திற்கு எவ்வளவு நிதியை மத்திய அரசு வழங்குகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

    இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சாதாரண புயல் என்றால் தமிழக அரசு கோரிய நிதியில், 4 முதல் 5 சதவீதம் நிவாரண நிதி மட்டும் தான் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும். கஜா புயலை தேசிய பேரிடர் என அறிவித்தால்தான் முழுமையான நிதி கிடைக்கும். இந்தப் புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய குழுவிடம் முதன்முதலில் குரல் கொடுத்தது நான்தான்.

    மத்திய அரசு நிதி உதவி வழங்கும் என நம்புகிறோம். தராவிட்டால் என்ன செய்வோம் என்பதை பின்னர் முடிவு செய்வோம்.

    ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்கு தேவையில்லை என்பது தான் எங்கள் கருத்து. ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிமன்றத்தில் சரியாக வாதம் செய்யவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். எப்படி வாதாடுவது? என்பது எங்களுக்கு தெரியும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில்  சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

    கருர் மக்களவை தொகுதியில் எந்த ஒரு எம்.பி.யும் என்னைப் போல கிராமம், கிராமமாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டது இல்லை. எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்மை செய்யவும், நன்றி கூறவும் தான் கிராமங்களுக்கு சென்று மக்களைச் சந்திக்கிறேன் என்றார் தம்பிதுரை.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: